பாஜகவில் சரத்குமார்… நள்ளிரவில் நடந்தது என்ன.? அண்ணாமலை விளக்கம்.!

Sarathkumar - Annamalai BJP President

BJP – Sarathkumar : நடிகர் சரத்குமார் கடந்த 2007ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சி எனும் அரசியல் கட்சியை துவங்கினார்.  அதன் பிறகு 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி, 2021இல் மக்கள் நீதி மய்யம் உடன் கூட்டணி என செயல்பட்ட சரத்குமார் தற்போது பாஜக கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுக்க உள்ளார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தனது கட்சியை அப்படியே பாஜவுடன் இணைத்துவிட்டார்.

Read More – சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் தலைவர் சரத்குமார்.!

இந்த நிகழ்வு நேற்று சென்னை திநகரில் உள்ள சமக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். அதில், பேசிய சமக கட்சி தலைவர் சரத்குமார் , தான் பாஜகவில் இணைந்ததாக அறிவித்தார். நள்ளிரவில் இந்த யோசனை வந்தது என்றும், அதனை தனது மனைவியிடம் கூறினேன் என்றும் பின்னர் அவர் சம்மதத்தின் பெயரில் இந்த முடிவை எடுத்துள்ளேன் எனவும் கூறினார். பெருந்தலைவர் காமராஜர் போல , பிரதமர் மோடி ஆட்சி செய்து வருவதாகவும், நாட்டு மக்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சரத்குமார் கூறினார்.

Read More – தமிழகத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்படாது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி.

இது குறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் நேற்று பேசுகையில், சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் சமக தலைவர்கள். அவர்கள் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் பாஜகவில் இணைந்துள்ளனர். எனக்கு அவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 2.30 மணிக்கு போன் செய்தார்கள்.

அப்போது என்னிடம் பேசிய சரத்குமார் அண்ணன், தான் 20 ஆண்டுகளாக அரசியல் பயணம் செய்து கொண்டு இருக்கிறேன். அரசியல் ரீதியாக வேறு வேறு பாதையில் பயணித்துள்ளேன். இனி ஒரே பாதையில் செல்ல விரும்புகின்றேன் என கூறி எந்தவித நிபந்தனையும் இல்லாமல் பாஜகவில் இணைந்துள்ளனர் .

Read More – அரசு ஊழியர்களுக்கு இன்பச்செய்தி! அகவிலைப்படியை 4% உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

அரசியலில் எல்லாம் நடக்கும். திமுக போல எல்லோரும் பேரம் பேச மாட்டார்கள். பிரதமர் மோடியை எல்லோரும் ஏற்றுக்கொண்டனர். மோடியின் அடுத்த 25 ஆண்டுகால எதிர்கால நோக்கத்தை கருத்தில் கொண்டு சரத்குமார் அண்ணன் எங்களோடு இணைந்து இருக்கிறார் என பாஜகவில் சரத்குமார் இணைந்தது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்