சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக சரத் குமார் தேர்வு.!
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக சரத் குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழுவில், அக்கட்சியின் தலைவராக சரத்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுக்குழுவிற்கு பின் சரத்குமார் கூறியதாவது, நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் வெளிமாநிலத்தவர்கள் வருகை குறித்து காவல்நிலையத்தில் பதிவு செய்துகொள்ளவேண்டும் என்று சரத்குமார் தெரிவித்தார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்தும் கருத்து தெரிவித்த சரத்குமார், விளம்பரத்தில் நடிப்பது தவறில்லை, என்னை மட்டும் குறை சொல்வது சரியில்லை.
அரசு தான் இதில் முறையான நடவடிக்கை எடுத்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.