இன்று ஆய்தபூஜை……..தன்னை சுமக்கும் வண்டிக்கு ஒரு பூஜை……கல்விக்கு உகந்த நாள்…..!கொண்டாட்டம்….!!

Default Image

நாடு முழுவதும் இன்று ஆயுதபூஜை-சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Image result for சரஸ்வதி பூஜை 2018
‘கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டா’என்ற ஔவையின் வாக்கிற்க்கு இணங்க கல்விக்கடவுளாக வணங்கப்படுபவர் சரஸ்வதி தேவி வணங்கும் வகையில், சரஸ்வதி பூஜையும் மற்றும் தொழில், வர்த்தகம் நிறுவனங்கள், அலுவலகங்களை சிறப்பிக்கும் வகையில் ஆயுத பூஜையும் நடத்தப்படுகிறது.
Image result for சரஸ்வதி பூஜை பைக்
நவராத்திரி கடந்த ஒன்பது நாட்களாக நடைபெற்று வந்தது நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை நாடு முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
Related image
இதனை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் அலுவலகங்களில், மக்கள் தங்கள் தொழில் சிறக்க வேண்டி சிறப்பு பூஜை நடத்தினர்.
தொழிற்சாலைகளில் வாழை மரம், மாவிலை தோரணம், அலங்கார தோரணங்கள் கட்டி அலங்கரித்தனர்.
Image result for சரஸ்வதி பூஜை
தங்களது இயந்திரங்களை சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் பொட்டு வைத்தும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். வழிபாட்டுக்குப்பின்னர் தொழிலாளர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.மேலும் ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று காலை முதலே ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Image result for சரஸ்வதி பூஜை பைக்
இதில் பெரும்பாலான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் வடமாநிலங்களில் இன்று தசரா பண்டிகை கொண்டாட்டம் களை கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று கல்வி கற்றால் கல்வி கலைக்கு சிறப்பு பெற்ற கலைமகள் கலைவானி அருள்புரிவாள் என்று நம்பப்படுகிறது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்