#BREAKING :கோவை சிறுமி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை.!

Published by
murugan
  • இன்று காலை கோவை சிறுமி வழக்கில்  கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமார் குற்றவாளி என நீதிபதிகள் கூறி தீர்ப்பளித்தனர்.
  • இந்நிலையில் தற்போது கோவை சிறப்பு நீதிமன்றம் சந்தோஷ்குமாருக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும் , 302 பிரிவின் கீழ் குற்றவாளி தூக்கு தண்டனையும் வழங்கி உள்ளது.

கோவையில் உள்ள பன்னிமடை பகுதியில் கடந்த  மார்ச் மாதம் 25-ம் தேதி 7 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தார் .அப்போது அந்த சிறுமி காணாமல் போனார். இதை தொடர்ந்து அந்த சிறுமியின் தயார் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை இதை தொடர்ந்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதையெடுத்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணையை தொடங்கினர். பின்னர் 27-ம் தேதி அந்த அவர் வீட்டின் அருகே  சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். பின்னர் அந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்ததது.

இந்நிலையில் மார்ச் 31-ம் தேதி போலீசார் நடத்திய விசாரணை மூலம் அதே பகுதியை சார்ந்த சந்தோஷ்குமார் என்பவர் கைது  செய்யப்பட்டார்.இந்த வழக்கு கோவையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பின்னர் இந்த வழக்கை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இருதரப்பு வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்தால்  தீர்ப்பு இன்று வெளியாக இருந்த நிலையில்  இந்த வழக்கில் திடீர் திருப்பமாக  சிறுமியை வன்கொடுமை செய்ததில் மேலும் ஒருவர் தொடர்பு இருப்பதாக டிஎன்ஏ சோதனையில் நேற்று தெரியவந்து உள்ளது.

இதையெடுத்து சிறுமியின் தாய் நேற்று தனது மகள் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி கோவை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் சந்தோஷ்குமார் குற்றவாளி என கூறி தீர்ப்பளித்தனர்.

சந்தோஷ்குமார் தண்டனை குறித்து  3 மணியளவில் அறிவிக்கப்படும் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.இந்நிலையில் கோவை போக்ஸோ  சிறப்பு நீதிமன்றம் சந்தோஷ்குமாருக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும் , 302 பிரிவின் கீழ் குற்றவாளி  தூக்கு தண்டனையும் மற்றும் தடயத்தை மறைந்ததுக்காக 7 வருடம்  சிறையுடன் ,ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டு தண்டனை வழங்கி உள்ளது.

Published by
murugan

Recent Posts

இந்த 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்த 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது.  இந்த காற்றழுத்த தாழ்வு மையம்…

11 minutes ago

’26/11 மறக்குமா நெஞ்சம்’.. இந்தியாவை அதிர வைத்த தாஜ் ஹோட்டல் அட்டாக் நடந்த தினம் இன்று!

மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை…

19 minutes ago

இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்… உருமாறியது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய…

31 minutes ago

75வது அரசியல் சாசன தினம்! ஒரே மேடையில் திரௌபதி முர்மு, மோடி, ராகுல் காந்தி, கார்கே…

டெல்லி : 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது.…

45 minutes ago

மீண்டும் வெற்றி விழா? விரைவில் ‘அமரன்’ கொண்டட்டம்! கமலின் பிரம்மாண்ட திட்டம்!

சென்னை : தீபாவளியையொட்டி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் வெற்றிகரமாக 4வது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால்,  சிவகார்த்திகேயன்…

52 minutes ago

மகாராஷ்டிரா புதிய முதலமைச்சர் யார்? ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே!

மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…

1 hour ago