ராஜீவ்காந்தி வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த சாந்தன், திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கை, கால், காதுகளில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு நோய் தீவிரம் அடைந்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தண்டனை பெற்று விடுதலையான தன்னை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என இந்திய அரசிடம் அவர் கோரிக்கை வைத்தார்.
சென்னை மேயர் பிரியா சென்ற கார் மீது லாரி மோதி விபத்து
முன்னதாக இலங்கை அரசும் சாந்தன் இலங்கைக்கு திரும்ப அனுமதி அளித்தது. இப்படியான சூழலில் திருச்சி இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் உள்ள சாந்தனை சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கான அனுமதி கடிதத்தை மத்திய அரசு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு அனுப்பி உள்ளது. சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாந்தன், திங்கள் அல்லது செவ்வாய்கிழமை இலங்கைக்கு புறப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.