விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவில் திடீரென மயக்கமடைந்த சண்முக பாண்டியன்.!

சென்னை : விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவில் திடீரென மயக்கமடைந்த சண்முக பாண்டியன் கீழே விழுந்தார்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உருவச்சிலை திறப்பு விழா நடந்தது. இதில், விஜயகாந்தின் இளைய மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்த் உருச் சிலை திறப்பு விழாவின் போது, நிர்வாகிகள் அலைமோதியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த கூட்ட நெரிசல் காரணமாக மயக்கமடைந்து கீழே விழுந்த சண்முகபாண்டியன், உடனடியாக காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழாவை தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடபட்டது. தேமுதிக தலைமை அலுவகலத்தில் அவரது சிலையை திறந்து வைத்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். சிலையை திறந்து வைத்த பின், “தேமுதிக தலைமை அலுவலகம், இன்று முதல் ‘கேப்டன் ஆலயம் ‘என்று அழைக்கப்படும்” என்று அறிவித்தார்.