புதிய நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி திங்கட்கிழமை பதவியேற்கிறார்..!
சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி திங்கட்கிழமை பதவியேற்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி சாஹி நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பதிலாக சஞ்சீப் பானர்ஜி தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் இவர் சென்னை உயர்நீதி மன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி வருகின்ற திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜியை நியமித்து குடியரசு தலைவர் நேற்று உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.