கோவை போலீசார் மீது துப்பாக்கி சூடு.! விசாரணைக்காக அழைத்து செல்லும் போது தப்பிக்க முயற்சி.!
துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயற்சி செய்ததால் சஞ்சய்ராஜ் என்பவரை காவல்துறையினர் சுட்டு பிடித்துள்ளனர்.
கோவையில், சஞ்சய்ராஜா என்பவர் ஒரு கொலை வழக்கில் சரணடைந்துள்ளார். அவரை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து செல்லும் போது தப்பிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
அப்படி சஞ்சய் ராஜ் தப்பி செல்லும்போது, கரட்டுமேடு பகுதியில் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் அவர் சுட்டதாக தெரிகிறது. இதில் தற்காப்புக்காக காவல்துறையினர் சஞ்சய் ராஜை சுட்டு பிடித்தனர். இதனால் கரட்டுமேடு பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.