சங்கினா ‘நண்பன்’… ரஜினியுடன் இதை தான் பேசினேன்! சீமான் பேச்சு!

நடிகர் ரஜினி, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கும் நேரத்தில் அந்த சந்திப்பு குறித்து சீமான் பேசியுள்ளார்.

Seeman - Rajini

சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகிறார் என்றதும் வன்மையாக எதிர்த்தார். மேலும், அரசியல் மேடைகளில் ரஜினியைக் கண்டித்தும் பேசியிருப்பார். ஆனால், நேற்று சீமான் ரஜினியை நேரில் சந்தித்துள்ளார், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறி இருந்தது.

அதனைத் தொடர்ந்து, பலரும் பல கதைகளை பேசி வந்தனர், குறிப்பாக சீமான் அரசியல் நிமித்தமாக ரஜினியை சந்தித்து பேசியிருப்பார் என்றெல்லாம் பேசி வந்தனர். இந்த நிலையில், இன்று காலை சீமான், தான் ரஜினியிடம் என்ன பேசினார் என்பதை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

இது குறித்து சீமான் பேசிய போது, “ரஜினியுடன் திரையுலகம், அரசியல் குறித்து பல விஷயங்களை பேசினேன். ரஜினிகாந்தை சந்தித்ததே ஒரு அரசியல்தான். அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. அவர் வயதில் என்னைவிட மூத்தவர், இதனால் என்னை விட அதிக அரசியல் தலைவர்களுடன் பழகி இருப்பார்.

அரசியல் களம் என்பது ஒரு கொடூரமான ஒரு ஆட்டம், இது அவருக்கு சரியாக வராது என்று அவரிடமே நான் கூறினேன். அவருடன் நிறைய பேசினேன் அனைத்தையும் பகிர முடியாது”, என சீமான் கூறினார். மேலும், நடிகர் ரஜினியை சங்கி என்று கூறி விமர்சனம் செய்வதை குறித்தும் சீமான் பேசி இருந்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய சீமான், “சங்கினா என்னனு தெரியுமா? சக தோழன் ..நண்பன் என்று அர்த்தம். உண்மையான சங்கி யாரென்றால் எங்களை எல்லாம் சங்கி என்கிறார்கள் அவர்கள் தான் உண்மையான சங்கி. திமுகவை எதிர்த்தாலே சங்கி என்றால் பெருமையாக நாங்கள் சங்கி என்று ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். சங்கி என்றால் நண்பன் என்றும் பொருள் உண்டு. நீங்கள் அப்படியும் எடுத்துக் கொள்ளலாம்”, என்ற சீமான் பேசி இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்