சைவ-வைணவ தலத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா…….கொடியேற்றத்துடன் தொடங்கியது…!!திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

Default Image

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related image
தமிழகத்தின் சைவ (ம)வைணவ திருத்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் சிறப்பு வாய்ந்தது.இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் திருக்கல்யாண திருவிழா 12 நாட்கள் வெகுவாக சிறப்பாக நடைபெறும்.இந்த  விழா நாட்களில் சுவாமி,அம்பாள் காலை இரவு என பல்வேறு வாகனங்களில் வீதி உலா சிறப்பாக நடைபெறும்.
Related imageஇந்த ஆண்டிற்கான ஜப்பசி திருவிழா நேற்று காலை ஸ்ரீகோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் ஐப்பசி கல்யாண திருவிழா தொடங்கியது.கொடியை ராமசாமி பட்டர் காலை 5.48 மணிக்கு ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து கோவில் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
Image result for சங்கரன் கோவில் சங்கரநாராயணன்
இந்த கொடியேற்ற விழாவில் கோவில் ஊழியர் கணேசன், கோமதி அம்பிகை மாதர் சங்க அமைப்பாளர் பட்டமுத்து உள்ளிட்ட ஏராளமானோர்கள் மற்று திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் திருநாள் வருகிற 4-ந் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை தேரடி திடலில் சுவாமி அம்பாள் திருகாட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் இரவு கோவிலில் இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்