சங்கமம் கலைவிழா – வரும் ஆண்டுகளில் 8 நகரங்களில் நடத்தப்படும்..! – தமிழக நிதியமைச்சர்
சங்கமம் கலைவிழா வரும் ஆண்டுகளில் 8 நகரங்களில் நடத்தப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு.
சபாநாயகர் அப்பாவு தலைமையில், 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
சங்கமம் கலைவிழா
இந்த நிலையில், சங்கமம் கலைவிழா வரும் ஆண்டுகளில் 8 நகரங்களில் நடத்தப்படும். மேலும் 25 இடங்களில் நாட்டுப்புற, கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.