சந்தன கட்டைகள் கடத்தல் வீரப்பன் மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி இருவருக்கும் விஜயலட்சுமி, வித்யா ராணி என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் வித்யா ராணி என்பவர் வழக்கறிஞராக உள்ளார். இவர் தற்போது பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 2000 பேர் பாஜகவில் இணையும் விழா கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இந்த விழாவில் வீரப்பனின் 2வது மகள் வித்யா பாஜகவில் இணைந்தார்.
இதையடுத்து பேசிய வித்யா, தவறான வழியை தேர்வு செய்தாலும் சேவை செய்ய வேண்டும் என்பது தான் எனது தந்தை கொள்ளகையாக கொண்டிருந்தார். இதனால் மக்களுக்கும் நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும் என்பதால் பாஜகவில் நான் இணைத்திருக்கிறேன் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் பேசுகையில், பாஜக இருக்கும் வரை தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக முடியாது. மேலும் ஸ்டாலின் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று கூறினார். தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என முரளிதர ராவ் குறிப்பிட்டார். சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…