சந்தன கடத்தல் மன்னம் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்.!

Default Image
  • கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சந்தன கடத்தல் வீரப்பன் மகள் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

சந்தன கட்டைகள் கடத்தல் வீரப்பன் மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி இருவருக்கும் விஜயலட்சுமி, வித்யா ராணி என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் வித்யா ராணி என்பவர் வழக்கறிஞராக உள்ளார். இவர் தற்போது பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 2000 பேர் பாஜகவில் இணையும் விழா கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இந்த விழாவில் வீரப்பனின் 2வது மகள் வித்யா பாஜகவில் இணைந்தார்.

சந்தன கடத்தல் மன்னம் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்.!

இதையடுத்து பேசிய வித்யா, தவறான வழியை தேர்வு செய்தாலும் சேவை செய்ய வேண்டும் என்பது தான் எனது தந்தை கொள்ளகையாக கொண்டிருந்தார். இதனால் மக்களுக்கும் நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும் என்பதால் பாஜகவில் நான் இணைத்திருக்கிறேன் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் பேசுகையில், பாஜக இருக்கும் வரை தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக முடியாது. மேலும் ஸ்டாலின் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று கூறினார். தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என முரளிதர ராவ் குறிப்பிட்டார். சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்