“மணிமுத்தாற்றில் மணல்கொள்ளை”தூங்கும் அதிகாரிகள்..துயரத்தில் மக்கள்..!!
மணிமுத்தா ஆற்றங்கரையில் அதிக அளவில் மணல் எடுக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே மணிமுத்தா ஆற்றங்கரையில் அதிக அளவில் மணல் எடுக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சங்கராபுரம் வட்டாரத்தில் பரமநத்தம், கீழப்பட்டு,பிச்சநத்தம், வளையாம்பட்டு, கல்லேரிக்குப்பம் ஆகிய ஊர்களில் மணிமுத்தா ஆற்றின் கரைப்பகுதியில் பட்டநிலங்களைக் குத்தகைக்கு எடுத்துச் சிலர் செங்கல்சூளை நடத்தி வருகின்றனர்.
இந்த சூளை வைத்துள்ளவர்களும் நிலத்தின் உரிமையாளர்களும் சேர்ந்து நிலத்தின் மேல்மண்ணையும், அதன் அடியில் இருபதடி ஆழம் வரை படிந்துள்ள ஆற்று மணலையும் தோண்டி எடுத்து விற்று வருகின்றனர். இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுகிறது. கிணறுகளும் நீர்மட்டம் குறைந்து வறண்டுள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.ஆனால் அதிகாரிகள் ஆழ்ந்த துக்கத்தில் உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.
DINASUVADU