எடப்பாடி அருகே இரவு நேரத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை கிராமமக்கள் தடுத்து பிடித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வேப்பம் பட்டி கிராம பகுதியில் சுமார் 560 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இதில் மணல் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஏரியில் இரவு நேரத்தில் மணல் திருட்டு நடந்துகொண்டு வருகிறது.
இதே போன்று நேற்றும் நள்ளிரவு நேரத்தில் இந்த ஏரியில் இருந்து மணல் எடுத்துள்ளனர். அப்போது அங்கு திரண்ட கிராம மக்கள் கூட்டத்தால், வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.
இது குறித்து கூறிய கிராம மக்கள், பலமுறை மணல் திருட்டு நடப்பது குறித்து புகார் அளித்துள்ள நிலையில் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெயரைக்கொண்டு திருட்டு நடப்பதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இந்த மணல் திருட்டை தடுத்து நிறுத்தி இயற்கை வளத்தை பாதுக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…