“போலீசாருக்கு தெரியாமல் மணல் கடத்தல் நடக்க வாய்ப்பில்லை!”- உயர்நீதிமன்ற மதுரை கிளை

காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தெரியாமல் மணல் கடத்தல் நடப்பது வாய்ப்பில்லை என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
கள்ளடக்குறிச்சியில் உள்ள ஒரு ஓடை தடுப்பணையில் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று கொண்டே வந்தது. இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது, மணல் கடத்தலை தடுக்க நீதிமன்றம் எத்தனை உத்தரவுகள் பிறப்பித்தாலும், அரசு அதிகாரிகள் அதனை மதிப்பதில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தெரியாமல் மணல் கடத்தல் நடப்பது வாய்ப்பில்லை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.