மணல் கடத்தல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அவரது மனுவில்,வைகை நதிக்கரை பகுதியில் அமைந்துள்ள இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது.விவசாய பகுதிகளில் அரசின் அனுமதியை மீறி சவுடு மணல் எடுப்பதாக தெரிவித்தார்.மேலும் விவசாய நிலங்கள் மற்றும் தொல்லியல் ஆய்வுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.எனவே மணல் அள்ளும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது .அப்பொழுது உயர்நீதிமன்ற மதுரை கிளை,மணல் கடத்தல் விவகாரத்தில் உத்தரவுகளை பின்பற்றாவிட்டால் மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்துள்ளது.நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் தினமும் 10 வழக்குகள் மணல் எடுப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் சவுடு மண் எடுப்பதை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சிவகங்கை ஆட்சியர் விரிவான பதில் அளிக்க கோரி செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…