மாட்டு வண்டியில் மணல் கடத்தல்..,
லால்குடி:சுப்ரமணியன் மகன் ஞானமணி லால்குடி ஆங்கரை மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் . நடராஜன் மகன் பாலகுமார. இருவரும் அடிக்கடி இடையாற்றுமங்கலம் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட லால்குடி இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையில் போலீசார் இடையாற்றுமங்கலம் அடுத்த கொள்ளிடம் ஆற்றங்கரையில் ரோந்து பணியில் இடுபட்டிருந்தனர் அப்போது மேற்கண்ட இருவரும் மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து 2 பேரையும் போலிசார் கைது செய்தனர்.