ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மணல் கொள்ளை- பதிலளிக்க உத்தரவு.!
மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்ட கட்டுமானத்தில் நடந்த மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு.
அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் விடப்ப்பட்ட மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.15 கோடி மணல் கொள்ளை என புகார் கொடுக்கப்பட்டது. அதில், பெரியார் பேருந்து நிலைய கட்டுமானத்திற்காக தோன்றிய 30 அடி ஆழ பள்ளத்தில் தரமான மணல் கிடைத்தது. மணல் குறித்து கனிமவளத் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் பொறியாளர் அரசு மறைத்து விட்டதாகவும், கனிம வளத்துறை தெரியாமல் தனியாருக்கு ரூ.15 கோடிக்கு மணலை விற்று விட்டதாகவும், சட்டவிரோதமாக மணலை விற்ற பொறியாளர் அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரவிந்தராஜ் வழக்கு தொடர்ந்தார்.
குற்றச்சாட்டு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க நீதிபதி கிருபாகரன், துரைசாமி அமர்வு உத்தரவு பிறப்பித்தது. மணல் கடத்தலை கடுமையான குற்றமாக பார்க்க வேண்டும் என கருத்துத் தெரிவித்தனர்.