100 பேருக்கு பூணுல்.! சனாதினி ஆளுநர் ஆர்.என்.ரவி.! திருமாவளவன் விமர்சனம்.!
இன்று நந்தனார் குருபூஜை தினத்தை தொடர்ந்து நந்தனார் பிறந்த ஊரான சிதம்பரம் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் ஆதனூரில் விழா ஓன்று நடைபெற்றது. இந்த விழாவில் 100 பறையர்களுக்கு பூணுல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் ஜாதிய ரீதியிலான கொடுமைகள், குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார். பட்டியலின பெண்கள் கிராம தலைவர் பொறுப்பில் பதவியேற்க முடியாத நிலை தமிழகத்தில் இன்னும் உள்ளது. மேலும் அதிகபட்சமான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை. பாலியல் வன்கொடுமை வழக்கில் 7 சதவீத குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள்என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பள்ளிக்கூட மாணவன் கூட சாதிய பாகுபாடு காரணமாக தாக்கப்படுகிறான் என குற்றம் சாட்டினார். இதற்கிடையில் ஆளுநர் ரவி 100 பறையர்களுக்கு பூணுல் அணிவிக்கும் விழாவில் பங்கேற்று பேசியது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், நந்தனார் பிறந்த ஊர் ஆதனூரில் 100 பறையர்களுக்கு பூணூல் அணிவிக்காறாராம் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள். இது மேன்மைப் படுத்துகிறோம் என்னும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவுப் படுத்துவதாகும். இதுதான் சனாதனம் ஆகும். இதன்மூலம் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்?
பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களை கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்? அத்துடன், ஆளுநர் அவர்கள் நந்தன் வழிபட்டதால் நடராசர் கோவிலில் அடைக்கப்பட்டுள்ள சுவரைத் தகர்த்து வாசலைத் திறந்து விட வேண்டுகிறோம். நாடாண்ட மன்னன் நந்தனை மாடுதின்னும் புலையன் என இழிவுப்படுத்தும் பெரிய புராணக் கட்டுக்கதைகளைப் புறந்தள்ளுவோம் என அவர் பதிவிட்டுள்ளார்.