Sanathanam: உதயநிதி மீது நடவடிக்கை எடுத்திடுக.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 262 பேர் கடிதம்!

Minister Udhayanidhi Stalin

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில்,  அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 262 பேர் கடிதம் எழுதிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரபலங்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர். உதயநிதியின் பேச்சு சனாதன தர்மத்தை பின்பற்றுவோர் மனதை புண்படுத்தியுள்ளது.  வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவோர் மீது அரசு, காவல்துறை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யலாம் என்றும் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை எனில் உச்சநீதிமன்றம் உத்தரவை மீறும் வகையில் இருக்கும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்