கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் “சனாதன ஒழிப்பு மாநாடு ” எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, திராவிடர் கழகம் தலைவர் கீ.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, அந்நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன எதிர்ப்பு மாநாடு என்று பெயர் வைக்காமல், சனாதன ஒழிப்பு மாநாடு என வைத்திருப்பது பாராட்டுக்குரியது. சனாதானத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற நோய் தொற்று போல ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியது சர்ச்சையானது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன கருத்துக்கள் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியது. பாஜக மற்றும் இந்து அமைப்புகள் மத்தியில் பெரும் எதிர்ப்பலைகளை உண்டாக்கியது. அதுமட்டுமில்லாமல், சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை வைக்கும் அளவுக்கு இந்த விவகாரம் சென்றது.
8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் இன்று அடக்கம்.!
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலைத்தில் புகார்கள், சென்னை உள்ளிட்ட வடமாநில நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ப்பட்டன. அந்தவகையில், சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது பீகார் மாநில பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பிப்ரவரி 13ம் (இன்று) தேதி நேரில் ஆஜராக அமைச்சர் உதயநிதிக்கு பாட்னா நீதிமன்றம் ஜன.30ம் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதனால், இன்று அமைச்சர் உதயநிதி பாட்னா நீதிமன்றத்தில் ஆஜராவாரா அல்லது அவரது சார்பில் வழக்கறிஞர் ஆஜராவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனென்றால், மக்களவை தேர்தலுக்கான பணியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று அவர் ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,…