சனாதனம் என்பது தர்மமே அல்ல.. உதயநிதி பேச்சை கண்டு பாஜக பீதி அடைவது ஏன்? – டி.ராஜா

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. உதயநிதி பேச்சுக்கு ஒருபக்கம் ஆதரவு குரல் எழுந்து வரும் நிலையில், மறுபக்கம் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சரியானதே என்று இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், சாதி முறையை நிலைநிறுத்துவது தான் சனாதனம், இல்லை என மறுக்க முடியுமா?, ஜாதி முறை, ஆணாதிக்கம், சமுதாய ஏற்றத்தாழ்வை நிலை நிறுத்துகிறது சனாதனம்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டு பாஜக பீதி அடைவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். சனாதனமும் இந்து மதமும் ஒன்றல்ல, சனாதனம் என்றால் என்ன என்று அமித்ஷா உள்ளிட்ட பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும். கார்ல்மார்க்ஸ், பெரியார் பேரழிவை ஏற்படுத்திவிட்டதாக பேசுகிறார் ஆளுநர் ஆர்என் ரவி. பெரியாரையும், கார்ல்மார்க்ஸையும் அவமதிக்கும் வகையில் ஆளுநர் எப்படி பேசலாம் எனவும் கேட்டுள்ளார்.
எனவே, சனாதனம் என்பது தர்மமே அல்ல என்பதை முதலில் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அமித்ஷாவின் கருத்தோடும், பாஜகவின் கருத்தோடும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்து மதம் பற்றி அம்பேத்கர் எழுதியதை பாஜகவினர் முதலில் படித்து தெரிந்துகோலா வேண்டும் எனவும் கூறியுள்ளார்.