சனாதனம் வீழ்ந்தது – மாற்றம் என்பதே காலத்தின் கட்டாயம்! – ஆசிரியர் கீ.வீரமணி

Default Image

ஒடுக்கப்பட்ட (பழங்குடி) சமுதாயத்திலிருந்து முதல் பெண் குடியரசுத் தலைவர் – பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம்!என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட். 

நேற்று, இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், ஆசிரியர் கீ.வீரமணி அவர்களும் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘ஒடுக்கப்பட்ட (பழங்குடி) சமுதாயத்திலிருந்து முதல் பெண் குடியரசுத் தலைவர் – பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம்! சனாதனம் வீழ்ந்தது – மாற்றம் என்பதே காலத்தின் கட்டாயம்! இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும், சமூகநீதி – மதச்சார்பின்மை உள்ளிட்டவற்றைக் காப்பாற்றும் கடமை முக்கியம்!’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்