சனாதனத்தின் மூலமே பூமியில் உள்ள உயிர்களையும் நதிகளையும் காப்பாற்ற முடியும் – ஆளுநர் ஆர்.என்.ரவி
சனாதனத்தின் மூலமே பூமியில் உள்ள அனைத்து விதமான உயிர்களையும் காப்பாற்ற முடியும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.
வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில் பாலாறு பெருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழா 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் விழாவை குத்துவிளக்கு ஏற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழக ஆளுநர் அவர்கள் இந்தியா 2030ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட் மின் உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சனாதனத்தின் மூலமே பூமியில் உள்ள அனைத்து விதமான உயிர்களையும் காப்பாற்ற முடியும். இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்கள், இதுதான் சனாதனம் என தெரிவித்துள்ளார்.
மேலும், நாம் ஆதிகாலம் முதல் பஞ்சபூதங்களை வணங்கி வருகிறோம். சிலப்பதிகாரத்தில் அரசன் கூட குளங்களை வெட்டி பாதுகாக்க வேண்டும் என இளங்கோவடிகள் சொன்னதுபோல பிரதமர் மோடி அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்ரித் சரோவர் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.