ஒரே நிமிடத்தில் 68 ஆங்கில எழுத்து வடிவங்களை கூறி சனா ஸ்ரீ கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சென்னையில் வசிக்கும், கலால் வரித்துறையின் கூடுதல் ஆணையர் சமய முரளி. இவரது மகள் தான் 8 வயது நிரம்பிய சனாஸ்ரீ. இவர் ஆங்கில எழுத்துக்களின் வெவ்வேறு வடிவங்களை கண்டறிந்து சாதனை படைக்க, நீண்ட நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி, ஒரே நிமிடத்தில் 68 ஆங்கில எழுத்து வடிவங்களை கூறி சனா ஸ்ரீ கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து அவரது தாய் பிரவீனா கூறுகையில், கொரோனா ஊரடங்கால் குழந்தைகள் வீட்டிலேயே முடங்கி கிடந்த நிலையில், ஒய்வு நேரங்களை பயனுள்ள வகையில் மாற்றும் நோக்கில் பயிற்சி அளித்ததில் பலனாக, தனது குழந்தை இந்த சாதனையை படைத்ததாக கூறியுள்ளார்.
இதற்க்கு முன்னதாக ஒரு நிமிடத்தில் 37 எழுத்து வடிவங்களை கூறி கின்னஸ் சாதனை படைத்திருந்தனர். இந்த சாதனையை சனா ஸ்ரீ முறியடித்துள்ளார்.
ஹில்ஸ் : பிரபலமான பேவாட்ச் (Baywatch) தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அமெரிக்கன் நடிகை பாமெலா பாக் (Pamela…
டெக்சாஸ் : உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நேற்று ஸ்டார்ஷிப் 8 விண்கலத்தை விண்ணில் ஏவியது.…
சென்னை : இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் பயிற்சி மையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழா…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரக்கோணம் அருகே தக்கோலத்தில் நடைபெறும் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழாவில் கலந்து…
சென்னை : விமான நிலையங்கள், துறைமுகங்கள், பல்வேறு தனிநபர் பிரமுகர்கள் என பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய தொழிலாக…
சென்னை : மத்திய அரசு அறிமுகம் செய்த தேசிய கல்வி கொள்கை 2020-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு…