அமைச்சர் பதவி என்ற ஆணவத்தில் அராஜகமாக கொக்கரிக்கும் ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும்… ஸ்டாலின் வலியுறுத்தல்…
தமிழக பால்வள துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சும், அவரது செயல்பாடுகளும் பாரம்பரியமாக மத நல்லிணக்கம் கொண்ட தமிழகத்தில் மத வன்முறைகளையும், மத கலவரங்களையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளன என்றும், அதன் அடையாளமாக, விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. அரசியலில் அமைச்சருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் நடக்கும் மோதல்போக்கு குறித்த செய்தியை வெளியிட்ட ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ என்ற பத்திரிகையின் செய்தியாளர் கார்த்தி, சிவகாசியில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி, மருத்ஹ்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். என்றும், அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் வகையில், நடைபெற்றுள்ள இந்த கொலைவெறி தாக்குதலுக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் என்றும், மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதும், அதற்கு காரணமானவர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்துகிறேன். மேலும், எப்போது யாரைப்பற்றி பேசினாலும் “அடிப்பேன், உதைப்பேன், நாக்கை அறுப்பேன், தூக்கிப்போட்டு மிதிப்பேன்” என்று அமைச்சராக இருப்பதாலேயே ஆணவத்தினாலும், அராஜகமாகவும் கொக்கரித்து வரும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் கவர்னர் அமைதி காப்பது ஏன்?. என்றும் இந்த முற்றிப்போன நிலையிலாவது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேண்டும் என்றும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். .