தமிழகத்தில் இன்று முதல் இந்த பகுதியில் சலூன் திறக்கலாம்-முதல்வர் பழனிசாமி.!
ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் இன்று முதல் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி அனுமதி கொடுத்துள்ளார்.
மத்திய அரசு நாடு முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது. இதைத்தொடந்து மத்திய அரசு பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய மண்டலங்களுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதனால், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் விரும்பினால் சிவப்பு மண்டலத்திலும் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை திறந்து கொள்ளலாம் என கூறியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது முடிதிருத்தும் தொழிலாளி கோரிக்கையை பரிசீலித்து பெருநகர் சென்னை காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகள், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர மற்ற ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் இன்று முதல் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி அனுமதி கொடுத்துள்ளார்.
முடிதிருத்தும் நிலையங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்றவும், கையுறை அணிந்து முடிதிருத்துமாறும், கடையின் உரிமையாளர்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினி தெளிக்குமாறும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.