தண்டவாளத்தில் இருந்து 40 கொக்கிகள் அகற்றம்! ரயிலை கவிழ்க்க சதி?!
சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் அருகே, உள்ள தண்டவாளத்தில் உள்ள கொக்கிகள் அகற்றப்பட்டுள்ளது. தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொக்கிகள் தண்டவாளத்திற்கும் கான்க்ரீட் தளத்திற்கும் இடையே பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த கொக்கிகள் அகற்றினால், ரயில் வரும் வேகத்திற்கு ரயில் கவிழ்ந்து விடும். இங்கு 40 கொக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சோதனை நடித்தி வருகின்றனர்.
இந்த ரயில் தடத்தில் ஒரு கிமீ தூரத்திற்கு ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்காது. அதனை அறிந்து கொண்டு சில விஷமிகள் இவ்வாறு செய்துள்ளனர். இது ரயிலை கவிழ்க்க சதித்திட்டமா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.