பைக்கில் செல்போன் பேசியவரை நிறுத்தியதால் வந்த வினை.! போக்குவரத்து காவலர் மீது தாக்குதல்.!
சேலம் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் பாண்டியனை, கோகுல் ராஜ் என்பவர் தாக்கிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விதிகளை பின்பற்ற சொல்லி தனது வேலையை செய்து வந்த சேலம் மாநகரில் போக்குவரத்து காவலரை ஒருவர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பகுதியில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் போக்குவரத்து காவலர் பாண்டியன் என்பவர் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக செல்போன் பேசிக்கொண்டே கோகுலராஜ் என்பவர் வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது கோகுல் ராஜை, காவலர் பாண்டியன் தடுத்தி நிறுத்தியதாக தெரிகிறது.இதில் வாக்குவாதம் முற்றி கோகுல்ராஜ், காவலர் பாண்டியனை தாக்கியள்ளார். தற்போது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.