21 நாட்களாக கொரோனா இல்லாத சேலம் மாநகராட்சி.! பச்சை மண்டலமாக அறிவிக்கப்படுமா?!

கடந்த 21 நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சேலம் மாநகராட்சி உருவெடுத்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டிருக்கிறது. அதிலும் தலைநகர் சென்னை மற்றும், சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
தமிழகத்தில் முதன் முதலாக கொரோனா இல்லாத மாவட்டமாக அறியப்பட்ட கிருஷ்ணகிரியிலும் கொரோனா பாதிப்பு 20ஆக ஆனது இதனால் பச்சை மண்டல பகுதியில் இருந்து விலகியது.
தற்போது கடந்த 21 நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சேலம் மாநகராட்சி உருவெடுத்துள்ளது. இதனால் சேலம் மாநகராட்சி பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலத்தில் இதுவரை 35 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதில் 30 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 5 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.