கத்தியின்றி , ரத்தமின்றி நவீன அறுவை சிகிச்சை.! சேலம் மருத்துவர்கள் சாதனை.!

Salem govt hospital

கத்தியின்றி, ரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்து சேலம் அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

கத்தியின்றி, ரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்து சேலம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவர்கள் சாதனை படதைத்துள்ளனர். இதுகுறித்து தலைமை மருத்துவர்கள் கூறுகையில் கடந்த, மே, 13ஆம் தேதி புதிய அறுவை சிகிச்சை 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் முன்னிலையில் (இணையவழி) 6 அறுவை சிகிச்சைகள், கத்தியின்றி, ரத்தமின்றி, வலியின்றி மேற்கொள்ளப்பட்டது. என்று தெரிவித்தனர்.

மேலும், முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. தொண்டை பிரச்சனைகள், குறட்டை தடுக்கும் சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு இந்த நவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  அகில இந்திய காது மூக்கு தொண்டை சங்கம் மற்றும் சேலம் மருத்துவமனை காது மூக்கு தொண்டை நிபுணர்கள் குழு ஆகியோர் சேர்ந்து இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பிரான்சிஸ் இந்த நவீன அறுவைசிகிச்சைக்கு தலைமை ஏற்று செய்து முடித்தார். தனியார் மருத்துவமனைகளில் இதற்கான செலவு 1 முதல் 1.5 லட்சம் வரை செலவாகும். எனவும் சேலம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்