வார்டு உறுப்பினர் கடத்தப்பட்டாரா?! சேலம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தல் ரத்து!

- சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இதில், சேலம் மாவட்டடத்திலுள்ள தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியதிற்கு உட்பட்ட 1 வார்டில் சுயேட்சையாக வென்ற ஜானகி என்பவர் கடத்தப்பட்டதாக ஜானகி தரப்பு சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் கரணமாகத்தான் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தேரடிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025