தமிழ்நாட்டில் இருந்து போயிங் விமான நிறுவனத்திற்கு முக்கிய பாகங்கள் தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
முதல் முறையாக போயிங் விமானத்துக்கு முக்கிய பாகங்கள் தயாரித்து வழங்க தமிழகத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சேலம் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் போயிங் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் பரிமாற்றம் செய்யப்பட்டது.
விண்வெளி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான முக்கிய விமான பாகங்களை ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. சேலத்தில் உள்ள உற்பத்தி கூட்டத்தை 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் விரிவு படுத்துகிறது ஏரோஸ்பேஸ் நிறுவனம். நீண்ட காலத்திற்கு முக்கிய விமான பாகங்களை சேலம் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிகழ்வின் போது ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…