8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி 2 வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 109 மரங்களை வெட்டியதற்கும் கடும் கண்டனம் தெரிவித்தது.மேலும் சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஏன் தடை விதிக்க கூடாது ? தனியார் நிலத்தை உட்பிரிவு செய்து அரசு அளித்த அறிக்கையை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.
அதேபோல் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்காக மரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவை மீறினால் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதன் பின்னர் ஆய்வு அறிக்கையை வெள்ளிக்கிழமை(இன்று ) தாக்கல் செய்வதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று மத்திய அரசு இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தனது தரப்பு பதிலை தாக்கல் செய்தது.அதில் சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி 2 வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும் 8 வழிச்சாலை திட்டத்தை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்துள்ளது .அதேபோல் திட்டத்தை இறுதி செய்யும்வரை நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…