சேலம்-சென்னை 8 வழிச்சாலை….! நிலம் கையகப்படுத்தும் நிறுத்தி வைப்பு…!

Default Image

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி 2 வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி  வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  109 மரங்களை வெட்டியதற்கும்  கடும் கண்டனம் தெரிவித்தது.மேலும்  சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஏன் தடை விதிக்க கூடாது ? தனியார் நிலத்தை உட்பிரிவு செய்து அரசு அளித்த அறிக்கையை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.

Image result for சென்னை உயர் நீதிமன்றம் 8 வழிச்சாலை

அதேபோல் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்காக மரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவை மீறினால் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதன் பின்னர் ஆய்வு அறிக்கையை வெள்ளிக்கிழமை(இன்று ) தாக்கல் செய்வதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.

இந்நிலையில் இன்று மத்திய அரசு இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தனது தரப்பு பதிலை தாக்கல் செய்தது.அதில் சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி 2 வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும் 8 வழிச்சாலை திட்டத்தை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்துள்ளது .அதேபோல் திட்டத்தை இறுதி செய்யும்வரை நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்று  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Wayanad - Jarkhand election
Annamalai (12) (1)
Doctors Strike
TN Govt Hospital Kalaignar
Guindy Govt hospital - Tamilnadu CM MK Stalin
Anbumani Ramadoss
kalaignar centenary hospital