சேலம் : விரைவில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும் – முதல்வர்!
சேலத்தில் விரைவில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் இன்று அரசு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள், அனைத்து மாவட்டங்களிலும் நலத் திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் 120 கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என உறுதி அளித்ததுடன், விரைவில் சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.