வேதா இல்லம் விற்பனைக்கு வருவதாக வதந்தியாக செய்திகள் பரவி வருவதாகவும், அதை நம்ப வேண்டாம் என்றும் ஜெ.தீபா ஆடியோ வெளியிட்டுள்ளார்.
போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம் விற்பனைக்கு வருவதாக தகவல்கள் வெளியாவது வதந்தி என்றும், அதனை நம்ப வேண்டாம் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோவில் அவர் கூறுகையில், போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் பூர்வீக இல்லம். அவர் மறைந்த பின்பு அந்த இல்லம் ஜெயலலிதா வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு பல்வேறு சட்டப் போராட்டங்களை தொடர்ந்து, தற்போது இந்த வீடு எங்கள் கையில் வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஜெயலலிதாவின் வேதா இல்லம் விற்பனைக்கு வருவதாக வதந்தியான செய்திகள் பரவி வருகிறது.
இவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ஜெயலலிதா அரசியலில் நுழைந்து முதலமைச்சர் பொறுப்பில் இருந்ததால், அவருக்கு உதவி செய்த பல பேர் தேவைப்பட்டனர். அவருடன் இருந்து உதவி செய்த காரணத்துக்காக அவருடைய சொத்துக்களை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும், இது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பல சட்ட போராட்டங்களுக்குப் பின்பு வேதா நிலையம் தங்கள் கைவசம் வந்துள்ளதால் அந்த வீட்டை கண்ணும் கருத்துமாக பராமரித்து வருவதோடு, கூடிய விரைவில் அந்த வேதா இல்லத்தில் குடியேற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…