300 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை… கூட்டுறவுத்துறை.!

Tomato sales 300

தமிழகம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும்.

தமிழகத்தில் திடீரென உயர்ந்துள்ள தக்காளி விலையின் காரணமாக பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர், இதனை தடுக்கும் விதமாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஏற்கனவே அறிவித்தது போல், தமிழகத்தில் தக்காளி விலை மீண்டும் இயல்புநிலைக்கு வராவிட்டால் ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து பொதுமக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருக்கும் தக்காளி விலை உயர்வை சமாளிக்கும் பொருட்டு, நாளை முதல் தமிழகத்தில் உள்ள 300 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படவுள்ளதாக கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே சென்னையில் பல ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்