அமுதம் அங்காடிகளில் நாளை முதல் துவரம் பருப்பு விற்பனை!
சென்னை அமுதம் பல்பொருள் அங்காடிகள், நியாய விலைக் கடைகளில், நாளை முதல் கொள்முதல் விலைக்கு அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில், நாளை முதல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் தக்காளி கொள்முதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதில், தக்காளி 1கிலோ ரூ.60க்கும், துவரம் பருப்பு 500 கிராம் ரூ.75க்கும், உளுத்தம் பருப்பு 500 கிராம் ரூ.60க்கும் விற்பனை செய்ய உணவுத்துறை திட்டமிட்டுள்ளது.