நியாயவிலை கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!
நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ராகி, கம்பு, திணை, குதிரைவாளி, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு எடுத்து தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
முதற்கட்டமாக சோதனை அடிப்படையில், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்கள் கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
மேலும், சிறுதானியங்களின் விலையை நிர்ணயம் செய்ய கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கவும், சிறு தானியங்களின் மதிப்பை கூடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நியாய விலைக்கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை செய்ய உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
#TNGovt #rationshop #TamilNadu pic.twitter.com/3kePQgtNRa— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) January 27, 2022