ஜவுளி கடையில் 5 ரூபாய்க்கு சேலை, 1 ரூபாய்க்கு லுங்கி விற்பனை.! அலைமோதும் மக்கள் கூட்டம்.!
- திருவண்ணாமலை வந்தவாசியில் உள்ள பிரபலமான துணிக் கடையின் 51-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, 5 ரூபாய்க்கு சேலையும், 1 ரூபாய்க்கு லுங்கியும் விற்பனை செய்யப்பட்டது.
- கூட்டத்தில் சிக்கிய அக்கடையின் பெண் ஊழியர் ஒருவர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள பிரபலமான துணிக் கடையின் 51-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, 3 தினங்களுக்கு 5 ரூபாய்க்கு சேலையும், 1 ரூபாய்க்கு லுங்கியும் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து காலையில் இருந்தே கடை வாசலில் குவிந்திருந்த பொதுமக்கள், கடையின் ஷெட்டரை திறந்த உடன் உள்ளே நுழைந்தனர். ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கானோர் குவிந்ததால் நெரிசல் காணப்பட்டது. மேலும் போக்குவரத்துக்கும் தடை ஏற்ப்பட்டது.
இதனிடையே, கூட்டத்தில் சிக்கிய அக்கடையின் பெண் ஊழியர் ஒருவர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மயக்கம் அடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் வந்தும், கூட்டம் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனம் திரும்பிச் சென்றதால், மயக்கமடைந்த பெண் ஊழியரை அருகில் இருந்தவர்கள் மீட்டு முதலுதவி அளித்து, பின்னர் குணப்படுத்தப்பட்டனர்.