LKG, UKG வகுப்புகளுக்கான தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்கிறதா? – அமைச்சர் அன்பில் மகேஷ்
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கும் வரை, தேர்வுக்கான பயிற்சி தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், LKG, UKG வகுப்புகளுக்கான தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதிய உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த அவர், வரும் 10-ம் தேதி நிதியமைச்சருடன் ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது பொய்ப்பிரச்சாரம். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கும் வரை, தேர்வுக்கான பயிற்சி தொடரும். பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கம் குறித்து கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது; மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து விடுபட சிற்பி திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.