ஒப்பந்த ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தொகுப்பூதியம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.12,000 ஆகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.15,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.18,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியாகியுள்ளது.