அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம்!

teachers

TN Govt: அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய உத்தரவு.

கடந்த பிப்ரவரி 19 முதல் மார்ச் 8ம் தேதி வரை சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குறிப்பாக, திண்டுக்கல் வடமதுரை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியத்தை வலியுறுத்தி 19 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், உரிய அனுமதி இல்லாமல் அரசுக்கு  எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, போராட்டத்தில் கலந்துகொண்ட நாட்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், போராட்டத்தில் ஈடுபட்ட 19 நாட்களுக்கு உரிய ஊதியம், பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே, நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டிருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்