கொரோனா வைரஸ் காரணமாக தற்போது இந்தியா முழுவதும் 21 நாளைக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடைகள், ஆலயங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன. சந்தைகள் மருத்துவமனைகள் என பொதுமக்களுக்கு அத்தியாவசியமான இடங்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி,சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் சூரமங்கலம் உழவர் சந்தை மற்றும் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் தினசரி சந்தை ஆகிய இரண்டு சந்தைகளும் இயங்கும்.
இனி முனியப்பன் கோயில் வளாகத்தில் அஸ்தம்பட்டி உழவர் சந்தை இயங்கும்.இனி காமராஜர் காலனி 1-வது தெருவில் அம்மாபேட்டை உழவர் சந்தை இயங்கும். இனி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் அருகில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தாதகாப்பட்டி உழவர் சந்தை இயங்கும்.
எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் எடப்பாடி உழவர் சந்தை இயங்கும். இளம்பிள்ளை வாரச்சந்தை பகுதியில் இளம்பிள்ளை உழவர் சந்தை இயங்கும். ஆத்தூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ஆத்தூர் உழவர் சந்தை இயங்கும்.அறிவிக்கப்பட்ட புதிய இடங்களில் வருகின்ற சனிக்கிழமை முதல் உழவர் சந்தைகள், இதர காய்கறி சந்தைகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…