தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் சக்கா ஜாம் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் உள்ளிட்டோர் கைது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று ‘சக்கா ஜாம்’ என்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘சக்கா ஜாம்’ என்பது மற்ற வாகனங்களை ஓட விடாமல் செய்யும் சாலை மறியல் போராட்டமாகும்.இந்த நிலையில், தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் சக்கா ஜாம் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் உள்ளிட்டோரை காவல்துறை கைது செய்து வருகிறது.
ராஜஸ்தான் – ஹரியானா எல்லையான ஷாஜகான்பூரில் தேசிய நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், மொகாலி உள்ளிட்ட இடங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளனர். இதுபோன்று தமிழகத்தில் ராஜபாளையம் அருகே சேத்தூர், கடலூர், தஞ்சை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சக்கா ஜாம் என்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி புதுச்சேரி அண்ணாசாலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, விவசாயிகளின் சக்கா ஜாம் டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்டில் இதுவரை நடைபெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…