ஆஹா…!மூலிகைகளுடன் கூடிய புதிய முகக்கவசம் அறிமுகம்…!
கொரோனா பாதிக்காத வகையில் மூலிகைகளுடன் கூடிய புதிய வகையிலான முகக்கவசத்தை தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் கண்டுபித்து,மக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,அதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட அரசு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.அந்த வகையில்,வெளியில் சென்றால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,தனியார் கல்லூரியில்,பொறியியல் ரசாயனம் பிரிவில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும்,ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டையைச் சேர்ந்த சஜித் என்ற மாணவர்,அதிமதுரம் உள்ளிட்ட 16 வகையான மூலிகைகளை வைத்து சுவாசக்கோளாறு ஏற்படாத வகையில் ஆயுர்வேத முகக்கவசத்தை தயாரித்துள்ளார்.
மேலும்,இதனை முறையாக தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையத்தின் அனுமதி பெற்று,மக்கள் உபயோகிக்கும் வகையில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாக மாணவர் சஜித் தெரிவித்துள்ளார்.