சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் – தமிழிசை
தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு. சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் என ஆளுநர் தமிழிசை பேட்டி.
கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவரிடம், இயக்குனர் வெற்றிமாறனுக்கு கமலஹாசன் ஆதரவு கொடுத்து இருப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தஞ்சை பெரிய கோயிலை பார்த்து வளர்ந்தவள் நான். அடையாளங்களை மறைக்க பார்க்கின்றனர். கலாசார அடையாளங்களை மறைப்பதை எல்லோரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்து கலாச்சார அடையாளத்தை தேவைக்காக திருப்பி கொண்டால் ஏற்று கொள்ள முடியாது. தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு. சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம். அடையாளங்களை முற்பட்டால் அது சரியாக இருக்காது என தெரிவித்துள்ளார்.