லட்சக்கணக்கான மக்களுக்கு ருத்ராட்ச தீட்சை வழங்கிய சத்குரு!

Default Image

உலகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான மக்களுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் சக்திவாய்ந்த செயல்முறை மூலம் நேற்று (ஜனவரி 3) ருத்ராட்ச தீட்சை வழங்கினார்.

ஆதியோகி முன்பு நடந்த இந்நிகழ்ச்சியில் சத்குரு அவர்கள் பங்கேற்று ருத்ராட்சத்தின் முக்கியத்துவம் குறித்து பேசியதாவது: ருத்ராட்ச விதைகள் இமயமலை பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இது இயற்கையாகவே தனித்துவமான அதிர்வுகளை கொண்டது. இந்த அதிர்வுகள் ஒரு மனிதர் தன் சக்தியை ஒருங்கமைத்து, அதை உறுதிப்படுத்த உதவுகிறது. இந்த சக்தி உங்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் போல் செயல்படும். வெளியில் இருந்து வர கூடிய பல விதமான பாதிப்புகளில் இருந்து உங்களை காக்கும். எல்லாவற்றுக்கும் மேல் நீங்கள் உங்கள் செயலை ஆற்றல் வாய்ந்த முறையில் செய்ய உதவியாக இருக்கும்.

ருத்ட்ராசங்களில் ஒரு முகத்தில் இருந்து 14 முகம் வரை உள்ளது. ஆதியோகி ருத்ராட்ச தீட்சையில் உங்களுக்கு பஞ்சமுகி எனப்படும் ஐந்து முக ருத்ராட்சத்தை அளித்துள்ளோம். குடும்ப மற்றும் சமூக சூழ்நிலைகளில் வாழ்பவர்களுக்கு இந்த ஐந்து முக ருத்ட்ராசம் மிகவும் சிறந்தது. 12 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சண்முகி எனப்படும் 6 முக ருத்ட்ராசத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

மற்ற ருத்ராட்சங்கள் எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட காரணத்திற்காக அணியப்படுகிறது. அதை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அணிய கூடாது. நீங்கள் ருத்ட்ராசத்தை ஒரு முறை அணிந்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் விடுதலைக்கான பாதையில் இருக்கிறீர்கள் என உலகிற்கு அறிவிக்கிறீர்கள். இது ஒரு குறியீடு மட்டுமல்ல. இது ஒரு கருவியும் கூட.

நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படி இருப்பதற்கு இந்த ருத்ட்ராசம் உங்களுக்கு உதவியாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு தனி மனிதரும் தனக்குள் இனிமையாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார். அப்படி நிகழ்ந்தால் உங்களை சுற்றி ஒரு இனிமையான சூழல் உருவாகும். நீங்கள் உடல், மனம், உணர்ச்சி, சக்தி அளவில் இனிமையாக இருக்க வேண்டும். உங்களுடைய இருப்பு உங்களை சுற்றியுள்ளவர்களுக்கும் உலகிற்கும் இனிமையை தர வேண்டும். இது தான் என்னுடைய விருப்பமும் ஆசியும் இவ்வாறு சத்குரு பேசினார்.

முன்னதாக, ருத்ட்ராசம் குறித்த பல்வேறு விதமான மூட நம்பிக்கைகள் மற்றும் சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், அதை முறையாக பராமரிக்கும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பங்களா ஆகிய இந்திய மொழிகளிலும், ஸ்பானிஷ், ரஷ்யன், ப்ரெஞ்சு, ஜெர்மன், மாண்ட்ரியன் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்